Contact No : +91 - 95851 96999

Health benefits of neem flower

  • Written by : admin
  • Published in : Health Benefits
  • Date : 2017-08-31
  • Hits : 2089
  • Comments : 0

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை

வேப்பம் பூ

வேப்பம் பூ (ஒரு கைப்பிடி) அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்து பின்பு அந்த நீரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

வேப்பம் பூ (ஒரு கைப்பிடி) அளவு எடுத்து நன்றாக கொதிக்கின்ற நீரில் போடவும். பின்பு அதிலிருந்து வெளிவரும் ஆவியை காதில் படும் படி பிடித்து வந்தால் காதில் சீல் வடிதல் குணமாகும்.

வேப்பம் பூ கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்பட்ட புண் விரைவில் குணமாகும்.

வேப்பம் பூவை எடுத்து வறுத்துப் பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தியும், ஏப்பமும் தரும் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

வேப்பம் பூவை நன்றாக உலரவைத்து அவற்றை நன்கு அரைத்து சமஅளவு வெடியுப்புடன் கலந்து காற்றுப் புகா பாத்திரத்தில் வைத்து தினந்தோறும். எடுத்துக் கண்களில் தீட்டி வந்தால் கண்கள் பளிச்சென்று தெரியும்.

வேப்பம் பூ வயிற்றுக்கு தீங்கின்றி குடலிலுள்ள மலக்கிருமிகளை ஒழிக்கும்.சிறுவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்த வாரத்திற்கு இரு நாட்கள் வேப்பம்பூ கஷாயம வைத்துக் குடிக்க கொடுக்கலாம்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் குமட்டல், வாந்தி , மயக்கம் குணமாகும்.

KOVAI HERBAL CARE

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist

Purchase online through www.salemhomefoods.com


Tags:


Leave a comment

Captcha